மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜம்மு-காஷ்மீர் புல்வாமா கிராமத்தில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள அரிஹால் கிராமத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்ததாக ராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2023, 4:55 am

புல்வாமா: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள அரிஹால் கிராமத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்ததாக ராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்திய இராணுவத்தின் சீனார் கார்ப்ஸ், அதன் எக்ஸ் சமூக வலைதள பதிவில், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், அரிஹால் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, வியாழக்கிழமை இரவு ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரின் கூட்டாக அரிஹால் கிராமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த பகுதியில் குவியல் குவியலாக ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கை சுற்றிவலைத்து மீட்ட போது அங்கிருந்த பயங்கரவாதி வீரர்கள் நோக்கி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். இதையடுத்து வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில்  பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர், அங்கிருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

அந்த பகுதியில் ராணுவம் வீரர்ரகள் மற்றும் காவல்துறையினரின் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.