தில்லியில் தொடரும் காற்று மாசு பிரச்னை!

தலைநகர் தில்லியில் காற்று மாசு 'மிகவும் மோசம்' பிரிவில் தொடர்ந்து நீடிக்கிறது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தலைநகர் தில்லியில் காற்று மாசு 'மிகவும் மோசம்' பிரிவில் தொடர்ந்து நீடிக்கிறது. 

தில்லி மற்றும் என்சிஆா் பகுதியில் காற்று மாசு பிரச்னை தொடர்ந்து இருந்து வருகிறது.  கடந்த நவம்பா் மாதத்தில் காற்றின் தரம் 9 நாள்கள் ‘கடுமை’ பிரிவில் பதிவாகியிருந்தது. மேலும், அந்த மாதத்தில் 17 நாள்கள் ‘மிகவும் மோசம்’ பிரிவிலும் நான்கு நாள்கள் ‘மோசம்’ பிரிவிலும் இருந்துள்ளது. 

இந்நிலையில் கடந்த சில தினங்களாக 'மிகவும் மோசம்' பிரிவில் தொடர்ந்து நீடிக்கிறது. 

இன்று காலை 8 மணி நிலவரப்படி தில்லியில் காற்றுத் தரக் குறியீடு(AQI) 364 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. 

ஆர்கே புரம், பஞ்சாபி பாக், விவேக் விஹார், ஜஹாங்கிர்புரி, துவாராகா செக்டர் ஆகிய பகுதிகளில் 400 புள்ளிகளுக்கு மேல் பதிவாகியுள்ளது. 

தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த தில்லி அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், காற்று மாசு அதிகரித்துக் காணப்படுவதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com