தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை (டிச. 3) தொடங்கி நடைபெற்று வருகிறது.
தெலங்கானாவில் 119 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவ. 30 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் தெலங்கானாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில், காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வருகிறது. பிற்பகல் 12.10 மணி நிலவரப்படி காங்கிரஸ் -64, பிஆர்எஸ் - 43, பாஜக - 9, பிற - 3 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
இதையும் படிக்க | ராஜஸ்தானில் கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்தது பாஜக
தெலங்கானாவில் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதி ஆட்சியில் இருந்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 60 இடங்களுக்கும் மேல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
இதையடுத்து, தெலங்கானாவில் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக முன்னிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கைவிடப்பட்ட பிரசாந்த் - ஹரி திரைப்படம்?
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

"IPL பார்ப்பதுதான் அவர் வேலையா?" முதல்வரை விமர்சித்த அண்ணாமலை | DMK | BJP
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

