மிசோரமில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கா் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.

மிசோரமில் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் பண்டிகை என்பதால் மக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டது.

இன்று காலை தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. தொடர்ந்து, வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸும் ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com