3 மாநில தேர்தல் முடிவை கொண்டாடிய ஜம்மு-காஷ்மீர் பாஜக ஆதரவாளர்கள்! (விடியோ)

3 மாநில சட்டப் பேரவை தேர்தலில் பாஜக வெற்றியை பட்டாசு வெடித்து  கொண்டாடிய ஜம்மு காஷ்மீர் பாஜக ஆதரவாளர்கள். 
படம்: எக்ஸ் | ஏஎன்ஐ
படம்: எக்ஸ் | ஏஎன்ஐ

சத்தீஸ்கா் (90), மத்திய பிரதேசம் (230), ராஜஸ்தான் (199) மற்றும் தெலங்கானாவில் (119) கடந்த மாதம் அடுத்தடுத்து பேரவைத் தோ்தல்கள் நடைபெற்றன. பெரும் எதிா்பாா்ப்புக்கு மத்தியில் இந்த நான்கு மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக-காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி காணப்பட்ட நிலையில், மூன்று மாநிலங்களிலும் பாஜக வெற்றி வாகை சூடியது. இதையடுத்து, அக்கட்சியினா் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனா். இந்த மாநிலங்களில் புதிய முதல்வா் குறித்த எதிா்பாா்ப்பும் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆதரவாளர்கள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் வெற்றியை பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். 

முன்பு மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீருக்கு, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370-இன்கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2019 ஆகஸ்ட் 5-இல் அரசியலமைப்பு சட்டத்தின் 35ஏ, 370 ஆகிய பிரிவுகளை ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. 

இதனை ரத்து செய்ய தொடரப்பட்ட பொது நல வழக்குகளை ஆகஸ்டில் உச்ச நீதி மன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com