ஹைதராபாத் அருகே இந்தி விமானப் படையின் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் டூப்ரான் அருகே பயிற்சி விமானம் ஒன்று திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் விபத்துக்குள்ளானது. விமானம் பாறைகளுக்கு இடையே விழுந்ததும் தீப்பிடித்தது.
இந்த சம்பவத்தில் 2 விமானிகள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நடந்த பகுதிக்கு விரைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





