தில்லி: குளிர்கால பள்ளி விடுமுறை 6 நாள்களாக குறைப்பு!

தில்லியில் குளிர்கால பள்ளி விடுமுறை 6 நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தில்லி : தேசியத் தலைநகர் தில்லியில், குளிர்கால பள்ளி விடுமுறை 6 நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது.

தில்லியில், ஒவ்வொரு வருடமும் டிசம்பர் - ஜனவரி வரையிலான காலகட்டத்தில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையையொட்டி, பள்ளிகளுக்கு வழக்கமாக 15 நாள்கள் குளிர்கால விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில், நடப்பு கல்வியாண்டில், பள்ளிகளுக்கான குளிர்கால விடுமுறை, அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 15 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது.  

இந்தநிலையில், தில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மாதம் நிலவிய தீவிர காற்று மாசுபாட்டால், பள்ளிகளுக்கு  நவம்பர் 9 முதல் நவம்பர் 18 வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

இதன் காரணமாக, குளிர்கால விடுமுறை நாள்கள் குறைக்கப்பட்டிருப்பதாக கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2024, ஜனவரி 1 முதல் ஜனவரி 6 வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அளிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com