
புது தில்லி: தலைநகரில் வியாழக்கிழமை காற்றின் தரம் சற்று முன்னேற்றம் அடைந்து சில இடங்களில் மீண்டும் மோசம் பிரிவிலும் பல இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவிலும் இருந்தது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளி விவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, தில்லியின் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு புதன்கிழமை 286 ஆகப் பதிவாகியிருந்த நிலையில், வியாழக்கிழமை காலை 276 ஆகப் பதிவாகியிருந்தது.
இருப்பினும், தில்லியின் சில பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு வியாழக்கிழமை காலை 'மிகவும் மோசமான' பிரிவில் பதிவாகியிருந்தது. வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஆனந்த் விஹாரில் 348 ஆகவும், ஐடிஓ இல் 313 ஆகவும், அசோக் விஹார் பகுதியில் 323 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.
முன்னதாக, தில்லி முழுவதும் காற்றின் தரம் செவ்வாய்க்கிழமை ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது புதன்கிழமை காலை 'மோசம்' பிரிவில் இருந்தது. ஆனந்த் விஹாரில் 291 ஆகவும், ஐஜிஐ விமான நிலையப் பகுதியில் 279 ஆகவும், ஐடிஓ இல் 252 ஆகவும், நரேலா பகுதியில் 283 ஆகவும் இருந்தது.
இதற்கிடையில், டிசம்பர் 11-ஆம் தேதி வரை தேசிய தலைநகரில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும்,த்துள்ளது.சனிக்கிழமை வரையிலும் நகரம் முழுவதும் காலையில் அடா் பனிமூட்டம் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக தில்லி முழுவதும் காற்றின் தரம் 'கடுமையான' முதல் '‘மிகவும் மோசம்’ பிரிவை சந்தித்து வருகிறது.
தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் கடந்த வாரம், தேசிய தலைநகரில் கிராப்-3 நீக்கப்பட்டதாகவும், ஆனால் கிராப்-1 மற்றும் 2 கண்டிப்பாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகவும் கூறினார்.
"கடந்த இரண்டு நாட்களாக பருவநிலை மாற்றத்தால், மாசுபாடு குறைந்துள்ளது. காற்று தர மேலாண்மை ஆணையம் கிராப்-3 கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. பிஎஸ்-3 பெட்ரோல் மற்றும் பிஎஸ்-4 டீசல் வாகனங்கள் மீதான தடை மற்றும் கட்டுமான இடிப்புக்கான தடை நீக்கப்பட்டது" என்று கோபால் ராய் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.