முதல்வர்களை நியமிப்பதில் தாமதம் ஏன்? காங்கிரஸ் கேள்வி?

சமீபத்திய நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களில் இதுவரை முதல்வர்களை அறிவிக்காதது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. 

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பதிவில், 

டிசம்பர் 3-ம் தேதி பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் முதல்வரை நியமிப்பதில் ஏன் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று ஊடகங்களில் அனைவராலும் விமர்சிக்கப்படுவதாக அவர் கூறினார். 

தெலங்கானாவின் ஒருநாள் முன்னதாகவே முதல்வராக ரேவந்த் ரெட்டி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மதியம் 1 மணிக்குப் பதவியேற்க உள்ளார். 

ஆனால் மூன்று நாள்கள் கடந்தும், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கான முதல்வர்களைக் கூட பாஜகவால் அறிவிக்க முடியவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com