திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

உளவு பார்த்த 18 செயலிகளை நீக்கிய கூகுள்; அப்போ நீங்க?

18 செயலிகள், உளவு பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதனை கூகுள்  தனது பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியது.

News image
Updated On :8 டிசம்பர் 2023, 12:14 pm

DIN


பல லட்சம் பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருக்கும் 18 செயலிகள், உளவு பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதனை கூகுள்  தனது பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியது.

இஎஸ்இடி அறிக்கையின்படி, கடந்த ஓராண்டு முழுக்க கூகுள் பிளே ஸ்டோரில் இருந்த இந்த 18 செயலிகளும், பெரிய அளவில் உளவுபார்த்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகளை பயன்படுத்துவோரின் செல்போனில் இருக்கும் ஏராளமான தகவல்களை இந்த செயலிகளை திருடியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உளவு கடன் செயலிகள் மூலம் தகவல்களை திருடும் செயலிகள், அதன் மூலம் கடன் பெறுவோரிடமிருந்து அதிக வட்டிக் கேட்டு மிரட்டி, புகைப்படங்களை, செல்ஃபோனிலிருக்கும் கான்டாக்ட் எண்களுக்கு அனுப்புவோம் என்பது போன்ற மிரட்டல்களை விடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இஎஸ்இடி ஆய்வின்படி, கடன் கொடுக்கும் செயலிகளாக அறிமுகமாகி, மிரட்டல் செயலிகளாக மாறுவதாகக் கூறப்படுகிறது. இது பெரும்பாலும், ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாட்டு மக்களை குறிவைத்தே இயக்கப்படுகின்றனவாம். இதில் 17 செயலிகள் முற்றிலும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. ஒன்று மட்டும் புதிய அப்டேட்டுகளுடன் இந்த உளவு பார்க்கும் வசதி இல்லாமல் வந்துள்ளதால் கூகுள் பிளே ஸ்டோரில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த செயலிகளை யாரேனும் பதிவிறக்கம் செய்திருந்தால் அவற்றை அவர்களே தாங்களாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

அதில் ஏஏ கிரெடிட், அமோர் கேஷ், ஈஸி கிரெடிட், காஷ்வாவ், கிரெடிபஸ், பிளாஷ்லோன், கோ கிரெடிடோ, பின்னப் லென்டிங், 4எஸ் கேஷ், ட்ரூநய்ரா, ஈஸி கேஷ் உள்ளிட்ட செயலிகளும் அடங்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.