ரூ.290 கோடி பறிமுதல் விவகாரத்தில் காங்கிரஸின் பங்கு எதுவுமில்லை: அவினாஷ் பாண்டே

ஒடிசா வருமான வரித்துறையினர் சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து விளக்கம் கேட்டுள்ளதாகக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கோப்பு
கோப்பு

ஒடிசாவில் நடந்த வருமான வரித்துறையினர் சோதனையில் சிக்கிய ரூ. 290 கோடி பணம் குறித்து காங்கிரஸ் எம்.பியிடம் விளக்கம் கேட்டுள்ளதாக ஜார்க்கண்ட் மாநில பொறுப்பு காங்கிரஸ் தலைவர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹுவுக்குச் சொந்தமான இடங்களிலும் அவருக்குச் சொந்தமானதான மதுபான ஆலையிலும் நடந்த சோதனையில் இதுவரை இல்லாதளவுக்கு ரூ.290 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவினாஷ், “கட்சி தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது. இது அவரது தனிப்பட்ட விவகாரம், இதில் காங்கிரஸ் செய்வதற்கு எதுவுமில்லை. அவர் காங்கிரஸ் எம்.பி. என்பதால் அவ்வளவு பெரிய பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விளக்கம் கேட்டுள்ளோம்”

மேலும், “100 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத் தொழில் நடந்துவருகிறது. தீரஜ் அதில் ஒரு பகுதி மட்டுமே. இது குறித்து அவர் விளக்கம் தரவேண்டும். இந்த விவகாரத்தில் காங்கிரஸை இழுப்பது எதிர்க்கட்சிகளின் சதி. பெரும்பான்மை அரசு ஜார்க்கண்டில் அமைந்ததுமுதல் பாஜக, பெயரைச் சீர்குலைக்கும் சதிவேலைகளில் ஈடுபட்டு வருகிறது” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக தலைவரும் ராஞ்சி எம்எல்ஏவுமான சிபி சிங், “காங்கிரஸ் கட்சி அதன் தலைவர்களைக் காப்பாற்றிக் கொள்ள சாஹுவைக் கைவிடப் பார்க்கிறது, அவர் சுயேட்சை எம்பியா அல்லது காங்கிரஸ் எம்பியா? சுயேட்சை எனச் சொல்ல சொல்லுங்கள். கட்சிக்குத் தொடர்பில்லை என ஒத்துக் கொள்கிறோம்” எனப் பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com