எது உண்மையான வளர்ச்சி? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

எது உண்மையான வளர்ச்சி? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதங்களை ஒப்பிட்டு உண்மையான வளர்ச்சி எது என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Published on

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதங்களை ஒப்பிட்டு உண்மையான வளர்ச்சி எது என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது, “2023 ஜூலை-செப்டம்பர் வரையிலான காலாண்டு புள்ளிவிவரங்களைக் குறிப்பிட்டு பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ‘இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி’ அதிகரித்துள்ளதாக மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்கள்.

காலாண்டு வளர்ச்சி விகிதமானது பல்வேறு காரணங்களுக்காக அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். எனவே அதனை ஒதுக்கி வைத்து விடலாம். பொருளாதாரம் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு அதைவிட முக்கியமானது என்னவென்றால், நீண்ட காலத்திற்கான ஆண்டு வளர்ச்சி விகிதங்கள்.

பொருளாதாரம் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு அதைவிட முக்கியமானது என்னவென்றால், நீண்ட காலத்திற்கான ஆண்டு வளர்ச்சி விகிதங்கள். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் ஆண்டு சராசரி ஜிடிபி வளர்ச்சி விகிதம் 8.1% ஆகும்.

தற்போது நரேந்திர மோடி பிரதமராக இருக்கும்போது ஆண்டு சராசரி ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5.4% ஆக உள்ளது.

அப்படியானால் எது உண்மையான வளர்ச்சியாகும்?” என்று ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com