370-வது சட்டப்பிரிவை நீக்கிய விவகாரத்தில் அரசின் முடிவு சரியானது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு நிரூபித்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று (டிசம்பர் 11) உச்சநீதிமன்றம் 370-வது சட்டப்பிரிவை நீக்கியது செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது.
இதனைக் குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “370வது சட்டப்பிரிவை நீக்கியது செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். 2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அரசமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்யும் முக்கியமான முடிவை எடுத்தார்.
அன்று முதல் ஜம்மு-காஷ்மீரில் அமைதி மற்றும் இயல்புநிலை திரும்பியுள்ளது. வன்முறையை மட்டுமே சந்தித்துவந்த பள்ளத்தாக்கு மக்கள் தற்போது வளர்ச்சியைக் கண்டு வருகின்றனர். சுற்றுலா மற்றும் வேளாண் துறையின் வளர்ச்சி ஜம்மு-காஷ்மீர் மக்களின் வருமானத்தை அதிகரித்துள்ளது.
370-வது சட்டப்பிரிவை நீக்குவதற்கான திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தபோது ஏராளமான உறுப்பினர்கள் இந்தியா அளித்துள்ள வாக்குறுதியை மீறக்கூடாது என்று கூறினார்கள். ஆனால் அந்த சட்டப்பிரிவால் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி யாரும் கவலைப்படவில்லை.
இந்த சட்டப்பிரிவுதான் பெண்களுக்கு எதிரான, தலித் மக்களுக்கு எதிரான மற்றும் வளர்ச்சிக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு வேர் ஆகும். இந்த 370-வது சட்டப்பிரிவை நீக்கிய மோடி அரசின் முடிவு சரியானது என்று இன்று (திங்கள்கிழமை) உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நிரூபித்துள்ளது.” என்று அமித் ஷா கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பு சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு 2019-ஆம் ஆண்டு நீக்கியது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் நடத்தப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதில், சட்டப்பிரிவு 370-ஐ குடியரசுத் தலைவர் நீக்கியது செல்லும் என்றும், லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்ததை அங்கீகரிப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: மே 9ல் புதிய பாஜக அரசு பதவியேற்பு!

நன்றி தெரிவிக்க கொளத்தூர் வந்த மு.க. ஸ்டாலின்! கண்ணீர்விட்ட தொண்டர்கள்!

நான் முதலமைச்சர் ஆகணும்... வைரலாகும் த்ரிஷா விடியோ!

தோனியால் உத்வேகம், 15 ஆண்டு வலி மிகுந்த காத்திருப்பு... மனம் திறந்த 33 வயதான அறிமுக வீரர்!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


