தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அந்நிய நேரடி முதலீட்டில் இந்த மாநிலம் மீண்டும் முதல் இடம்!

அந்நிய நேரடி முதலீட்டை அதிகம் ஈர்த்த மாநிலங்கள் குறித்து மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிக்கையின்படி இந்த மாநிலம் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News image

உதய் சமந்த் | கோப்பு (ANI)

Updated On :14 டிசம்பர் 2023, 9:13 am

DIN

மத்திய அரசால் வெளியிடப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு தரவுகளின்படி. மகாராஷ்டிர மாநிலம் அதிக முதலீட்டைப் பெற்று மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

சட்ட பேரவைக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்த மகாராஷ்டிர தொழில் துறை அமைச்சர் உதய் சமந்த், கடந்த மூன்று மாதங்களில் ரூ.28,868 கோடி அந்நிய முதலீடு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் தரவுகளில், மகாராஷ்டிர மாநிலம் அதிக அந்நிய முதலீட்டைப் பெற்ற மாநிலமாக இடம்பெற்றிருப்பதையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த இரு நிதியாண்டுகளில் கர்நாடக  மாநிலம் முன்னணி இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.