கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் பாதுகாப்பு மீறல்: சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் பாதுகாப்பு மீறல் தொடர்பாக தில்லி காவல்துறை கடுமையான சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

News image
Updated On :14 டிசம்பர் 2023, 4:50 am

DIN


புது தில்லி: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் பாதுகாப்பு மீறல் தொடர்பாக தில்லி காவல்துறை கடுமையான சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பயங்கரவாதத் தாக்குதலின் 22 ஆண்டு நிறைவையொட்டி,புதன்கிழமை நடந்த ஒரு பெரிய பாதுகாப்பு மீறலில்,  லக்னௌவைச் சோ்ந்த சாகா் சா்மா மற்றும் கா்நாடகத்தின் மைசூரைச் சோ்ந்த டி.மனோரஞ்சன் ஆகிய இருவர், பூஜ்ஜிய நேரத்தில் பாா்வையாளா் மாடத்தில் இருந்து பிற்பகல் 1.12 மணியளவில் மக்களவை அறைக்குள் குதித்து,சர்வாதிகாரம் கூடாது என்று முழக்கமிட்டவாறே அவைத் தலைவர் இருக்கையை நோக்கி விரைந்தவர்கள், அவைக்குள் குதித்து வண்ணப்புகைக் குப்பிகளை வீசியுள்ளனர். 

அதே நேரத்தில், குற்றம் சாட்டப்பட்ட மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த அமோல் ஷிண்டே மற்றும் ஹரியாணாவைச் சோ்ந்த நீலம் தேவி ஆகிய இருவர், நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே "சர்வாதிகாரம் கூடாது"  என்று முழக்கமிட்டவாறே இதேபோன்று வண்ணப்புகைக் புகைக் குப்பிகளை வீசி வீசியுள்ளனர். 

இந்த சம்பவத்தை திட்டமிட்ட 6 பேர் கொண்ட குழுவில் நால்வரும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தில்லி காவல்துறை கடுமையான சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) ஆகியவற்றின் தொடர்புடைய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணை காவல்துறை சிறப்புப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கைதான 5 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட 5 பேரின் கல்வித் தகுதி பின்னமி, போராட்ட நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவது குறித்து சிறப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அவர்களின் சமூக ஊடக நடவடிக்கைககள் மற்றும் கடந்த கால வரலாறு குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.