
சென்னை விமான நிலையத்தில் 1201 கிராம் போதைப் பொருள்கள் வைத்திருந்த நபரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, 'நைஜீரிய பாஸ்போர்ட்டுடன் அடிஸ் அபாபாவிலிருந்து வந்த பயணியின் மீது சோதனை நடத்தப்பட்டது. அதில் உருளை வடிவ பண்டல்கள் அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது எனத் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: தில்லி மேயர் ஷெல்லி ஓபராயின் முகநூல் பக்கம் முடக்கம்
அதில் 1201 கிராம் அளவிலான கொக்கைனைக் கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டதாக கடந்த டிசம்பர் 15-ல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.