
பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக டிசம்பர் 17,18 ஆகிய தேதிகளில் சூரத் மற்றும் வாராணசிக்குச் செல்கிறார் பிரதமர் மோடி.
நாளை(டிச.17) சூரத் விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையத்தையும், சூரத் டயமண்ட் போர்ஸையும் மோடி திறந்துவைக்கிறார்.
நாளை மறுநாள்(டிச.18) காசி தமிழ்ச் சங்கமம் 2-ஆம் கட்ட நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்க உள்ளார். பின்பு வாராணசியில் உள்ள ஸ்வர்வேட் கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அதன்பிறகு தனது நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.