தெலங்கானா தேர்தலில் பிஆர்எஸ் கட்சி தோற்றது எதனால்?: காரணம் கூறும் சித்தராமையா!

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி தோல்வியடைந்தது எதனால் என்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தெலங்கானா தேர்தலில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி தோல்வியடைந்தது எதனால் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா காரணம் கூறியுள்ளார்.

பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியையும், அதன் செயல் தலைவரான கே.டி.ராமாராவையும் செவ்வாய்க்கிழமை தாக்கிப் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா தெலங்கானா தேர்தலில் பிஆர்எஸ் கட்சி தோற்றதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முதல்வருமான சித்தராமையா எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி ஏன் தெலங்கானா தேர்தலில் தோல்வியடைந்தது என்று கே.டி.ராமாராவுக்கு தெரியுமா? 

ஏனென்றால் உங்களால் எது உண்மையான விடியோ, எது சித்தரிக்கப்பட்ட விடியோ என்று கூட கண்டுபிடிக்க முடியாது.

பாஜக போலியான விடியோக்களை உருவாக்கியது. உங்களது பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி அந்த விடியோக்கள் அனைத்தையும் பரப்பியது. நீங்கள் பாஜகவின் மிகச்சரியான பி டீமாக செயல்பட்டீர்கள். அதனால்தான் தோல்வி அடைந்தீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னதாக, சித்தராமையா பேசிய விடியோ ஒன்றினை முழுமையற்றதாக கே.டி.ராமாராவ் பகிர்ந்திருந்தார். அதற்கு பதிலடியாக தற்போது சித்தராமையா இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com