பாஜகவினர் ஜாதியின் பெயரால் மக்களைத் தூண்டிவிடக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை, இடைநீக்கம் செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கிண்டல் செய்த விவகாரத்தில், ஜாட் சமூக மக்களை கல்யாண் பானர்ஜி கிண்டல் செய்துவிட்டதாக பாஜகவினர் விமர்சித்து வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, “மாநிலங்களவைத் தலைவரின் கடமை என்பது அவைக்குள் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாகும். அவைக்குள் ஜாதியைப் பற்றி பேசுவதன் மூலம் மக்களை தூண்டிவிடக் கூடாது.
நான் கூட அவையில் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. உடனே நான் தலித் என்பதால்தான் எனக்கு பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று கூறலாமா?” என்று கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடா்பாக விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினா்கள் 142 பேர் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது, திரிணமூல் காங்கிரஸின் எம்.பி. கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கரைப் போன்று நகைச்சுவையாக அனைவரின் முன்னிலையில் செய்து காட்டினார்.
இந்த செயலைக் குறிப்பிட்டு, ஜகதீப் தன்கர் விவசாயியின் மகன் என்பதால்தான் கிண்டல் செய்ததாகவும், இதன்மூலம் ஜாட் சமூக மக்களை அவர் அவமதித்து விட்டதாகவும் பாஜகவினர் கூறி வரும் வேளையில் மல்லிகார்ஜுன கார்கே இவ்வாறு பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கைவிடப்பட்ட பிரசாந்த் - ஹரி திரைப்படம்?
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

"IPL பார்ப்பதுதான் அவர் வேலையா?" முதல்வரை விமர்சித்த அண்ணாமலை | DMK | BJP
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


