ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கேரள ஆளுநர் வலையில் மாணவர் அமைப்பினர் விழவில்லை!

மாநிலத்தின் அமைதியைக் கெடுக்க முயற்சிக்கும் கேரள ஆளுநரின் வலையில் மாணவர் அமைப்பினர் விழவில்லை என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

கேரள முதல்வர் பினராயி விஜயன்.

Published On :6 பிப்ரவரி 2024, 6:59 pm IST

கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், மாநிலத்தின் அமைதியைக் கெடுக்க முயற்சிப்பதாகவும் அவரது வலையில் இம்மாநில மாணவர்கள் விழாமல் கட்டுப்பாடோடு இருந்ததாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், மாணவர் அமைப்புகளுக்கு எதிராக ஆளுநர் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தியுள்ளார், ஆனால் மாணவர்கள், அவரைப் போல் தங்கள் தரத்தைத் தாழ்த்திக்கொள்ளாமல் அமைதியாக இருந்ததாகக் கூறியுள்ளார்.  

'இந்த அமைதியான மாநிலத்தில் ஆளுநர் விரும்பும் அளவிற்கான பிரச்னைகளையும் மோதல்களையும் உருவாக்க முடியாது' எனவும் கூறினார். 

மேலும், எதிர்கட்சித் தலைவர் வி டி சதீசனின் பேச்சு கலவரத்தைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறினார். காங்கிரஸ் இளைஞரணி போராட்டக்காரர்கள் மீது டிவொய்எஃப்ஐ (DYFI) அமைப்பினர் தாக்குதல் நடத்தியது உயிர் காக்கும் செயல் மட்டுமே எனவும் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.