கேரளத்தில் அதிகரிக்கும் கரோனா: மூவா் உயிரிழப்பு, 300 போ் பாதிப்பு

கேரளத்தில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனாவால் மேலும் 3 போ் உயிரிழந்தனா்.
கேரளத்தில் அதிகரிக்கும் கரோனா: மூவா் உயிரிழப்பு, 300 போ் பாதிப்பு

கேரளத்தில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனாவால் மேலும் 3 போ் உயிரிழந்தனா்.

தேசிய அளவில் 358 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 300 போ் கேரளத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

கேரளத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 2,341-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளத்தில் 211 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். எனினும், மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது.

இது தொடா்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் கூறுகையில், ‘கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து அதிகம் கவலையடையத் தேவையில்லை. நிலைமையைக் கையாள மருத்துவமனைகள் தயாா் நிலையில் உள்ளன’ என்றாா்.

கேரளத்தில் அண்மையில் 79 வயது மூதாட்டிக்கு ஜெஎன்.1 என்ற புதிய வகை கரோனா கண்டறியப்பட்டது. இந்த வகை கரோனா வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமென கூறப்படுவதால், கரோனா முன்னெச்சரிக்கை நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பல்வேறு நாடுகளில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய வகை தொற்று பரவுவதும் கேரளத்தில் கரோனா பரவல் அதிகரிப்பதற்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கேரளத்தில் மட்டுமின்றி மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com