காற்றின் தரம் மோசம்: கட்டிட பணிகள், வாகனங்களுக்குத் தடை?

நாட்டின் தலைநகரில் அதிகரித்துவரும் காற்று மாசு காரணமாக இந்தப் பணிகளுக்குத் தில்லி அரசு தடை விதித்துள்ளது.
கோப்பு
கோப்பு

தில்லி: நாட்டின் தலைநகரில் அதிகரித்துவரும் காற்று மாசு காரணமாக அத்தியாவசியமற்ற கட்டிட பணிகள் மற்றும் பிஎஸ் 3 பெட்ரோல், பிஎஸ் 4 டீசல் நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை இயங்குவதற்கு அரசு தடை விதித்துள்ளது. 

குறைந்த வேகத்தில் வீசுகிற காற்றோடு கூடிய மூடுபனி, தில்லியில் சராசரி மாசுபாட்டை அதிகரித்துச் செய்துள்ளதாக காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

காற்றின் தரக்குறியீடு (AQI) வெள்ளிக்கிழமை காலை முதல் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ள வாரியம், காலை 10 மணிக்கு 397 ஆக இருந்த குறியீட்டெண் மாலை 4 மணிக்கு 409 ஆக அதிகரித்ததாகத் தெரிவித்துள்ளது.

தரப்படுத்தப்பட்ட பதிலீட்டு செயல் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தைச் செயல்படுத்தியுள்ள கட்டுபாட்டு வாரியம், அத்தியாவசியமற்ற கட்டிடபணிகள், கல் உடைப்பு மற்றும் சுரங்க பணிகளுக்குத் தடை விதித்துள்ளது.

தேச பாதுகாப்பு, தேசத்திற்கு முதன்மையான திட்டங்கள், மருத்துவ மையங்கள், ரயில் நிலையத் தொடர்புடைய பணிகள், விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், மாநிலங்களுக்கிடையேயான பேருந்து போக்குவரத்து நிலையங்கள், நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், மின்சார கட்டுமானங்கள், குழாய் இணைப்பு, கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் குடிநீர் தொடர்புடைய பணிகளுக்கு விலக்கு அளித்துள்ளது.

மூன்றாவது கட்டச் செயல்திட்டத்தின்படி பிஎஸ்-3 பெட்ரோல் மற்றும் பிஎஸ்-4 டீசல் நான்கு சக்கர வாகனங்கள் தில்லி, குருக்ராம், ஃபரீதாபாத், காஸியாபாத் மற்றும் கெளதம் புத் நகர் ஆகிய பகுதிகளில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரக்குறியீடு 201 முதல் 300-க்குள் இருந்தால் முதல் கட்டம்- மோசம் என்றும் 301-400க்குள் இருந்தால் மிக மோசம் என்றும் 401-450-க்குள் எனில் கடுமையான தரம் என்றும் 450-க்கும் அதிகமாக இருக்கும்பட்சத்தில் கூடுதல் கடுமையான தரம் எனவும் வகைப்படுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com