இந்தியா கூட்டணி பலமாக உள்ளது: பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்

இந்தியா கூட்டணி பலமாக இருப்பதால்  பாஜகவை தோற்கடிக்க முடிவு செய்துள்ளோம் என்று பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். 
இந்தியா கூட்டணி பலமாக உள்ளது: பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்

இந்தியா கூட்டணி பலமாக இருப்பதால்  பாஜகவை தோற்கடிக்க முடிவு செய்துள்ளோம் என்று பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். 

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, பாஜக கூட்டணியை எதிா்கொள்ள காங்கிரஸ் உள்ளிட்ட 27 கட்சிகள் அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணியின் 4-ஆவது கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததால் பிகார் முதல்வர் நிதீஷ் குமாா் அதிருப்தியடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. 

ஆனால் இதனை பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இது மிகவும் பயனுள்ள சந்திப்பு (இந்தியா கூட்டணி). இவ்வளவு பெரிய கூட்டணி இருப்பதையும், அனைவரும் ஒன்றாக இருப்பதையும் குறிப்பிட்ட சில ஊடகப் பிரிவுகளால் ஜீரணிக்க முடியவில்லை. எதிர்மறையான விளம்பரம் செய்ய முயற்சிகள் நடக்கின்றன. நாங்கள் பலமாக இருக்கிறோம், ஒன்றாக இருக்கிறோம். 

பாஜகவை தோற்கடிக்க முடிவு செய்துள்ளோம் என்றார். இதைத்தொடர்ந்து முதல்வர் நிதீஷ்குமாரின் இல்லத்திற்கு சென்ற தேஜஸ்வி யாதவ் அவரை சந்தித்துப் பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com