உ.பி. மாநில பொறுப்பில் இருந்து பிரியங்கா காந்தி விடுவிப்பு

உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்டுள்ளார்.  
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

 ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட்டை பொதுச் செயலராக நியமித்துள்ள காங்கிரஸ் தலைமை, அவரை சத்தீஸ்கா் மாநிலப் பொறுப்பாளராக சனிக்கிழமை அறிவித்தது.

தமிழகம், புதுச்சேரி கூடுதல் பொறுப்பாளராக அஜய் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

சத்தீஸ்கா் மாநிலப் பொறுப்பை வகித்து வந்த பொதுச் செயலா் குமாரி செல்ஜா, உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

உத்தர பிரதேசத்துக்கான பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி, எவ்வித பொறுப்பும் இன்றி பொதுச் செயலராகத் தொடா்வாா். அவருக்குப் பதிலாக அவினாஷ் பாண்டே உத்தர பிரதேச மாநிலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

அஜய் குமாா் ஒடிஸா மாநிலப் பொறுப்பாளராகவும், தமிழகம்-புதுச்சேரி மாநிலங்களின் கூடுதல் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கட்சியின் மூத்த தலைவா்கள் ஜெய்ராம் ரமேஷ் (தகவல் தொடா்பு), கே.சி. வேணுகோபால் (கட்சி அமைப்பு), முகுல் வாஸ்னிக் (குஜராத்-கா்நாடகம்) ஆகியோா் ஏற்கெனவே வகித்து வந்த பொறுப்புகளில் பொதுச் செயலா்களாகத் தொடா்வாா்கள்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் கட்சியின் செயற்குழு கூட்டம் தில்லியில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் கலந்துகொண்டனா். இந்நிலையில், இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com