கேரளத்தில் 2 அமைச்சர்கள் ராஜிநாமா
கேரள அமைச்சரவையில் இருந்து இரண்டு அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.


கேரள அமைச்சரவையில் இருந்து இரண்டு அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.
கேரளத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜுவும், துறைமுகத்துறை அமைச்சர் அகமது தேவராகோவிலும் பதவி வகித்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் தங்களது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். கேரள முதல்வர் முதல்வர் பினராயி விஜயனை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து ராஜிநாமா கடிதத்தை அளித்தனர்.
அவர்களுக்குப் பதிலாக கே.பி.கணேஷ் குமார், கடன்னப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். இருவரும் டிசம்பர் 29ஆம் தேதி அமைச்சர்களாக பதவியேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கே.பி.கணேஷ் குமாருக்கு போக்குவரத்துத் துறையும், ராமச்சந்திரனுக்கு துறைமுகத்துறையும் ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இடதுசாரி கூட்டணி ஒப்பந்தத்தின் அடிப்படையில், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கும் வகையில் இரண்டு அமைச்சர்கள் ராஜிநாமாக செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...