ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறிய பாஜகவின் வாக்குறுதியைக் குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை எக்ஸ் சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “நாட்டின் மிகவும் தீவிரமான பிரச்னையாக வேலைவாய்ப்பின்மை இருந்து வருகிறது. 2022 - 2023ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, 15 முதல் 29 வயதுக்குட்பட்ட வயதினருக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் 10 சதவீதமாக உள்ளது.
இதையும் படிக்க | இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்தது மத்திய அரசு
இந்த எண்ணிக்கை கிராமப்புறத்தில் 8.3 சதவீதமாகவும், நகர்ப்பகுதிகளில் 13.8 சதவீதமாகவும் உள்ளது.” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் “ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறிய பாஜக வாக்குறுதி என்ன ஆயிற்று” என்று இளைஞர்கள் கேள்வி எழுப்பி வருவதாக தெரிவித்துள்ளார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சிதைக்கப்பட்டு, பல கோடி வேலைவாய்ப்புகள் ஒழிக்கப்பட்டதால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க | கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 காவலர்கள் மீது வழக்குப் பதிவு
बेरोज़गारी ही देश का सबसे ज्वलंत मुद्दा है।
15-29 वर्ष की आयु के व्यक्तियों की बेरोजगारी दर 10% है। (PLFS : July 2022-June 2023)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கைவிடப்பட்ட பிரசாந்த் - ஹரி திரைப்படம்?
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

"IPL பார்ப்பதுதான் அவர் வேலையா?" முதல்வரை விமர்சித்த அண்ணாமலை | DMK | BJP
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


