நாய் குரைத்ததால் ஏற்பட்ட தகராறில் பெண் கொலை!

நாய் குரைத்ததால் ஏற்பட்ட தகராறில் 65 வயது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நிகழந்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாய் குரைத்ததால் ஏற்பட்ட தகராறில் 65 வயது பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள 35 வயது நபரை பார்த்து ஒரு நாய் குரைத்ததைத் தொடந்து ஏற்பட்ட தகராறில் அந்த நாயின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து ஆசாத் நகர் காவல்நிலைய அதிகாரி நீரஜ் மேத்தா கூறியதாவது, “சாந்திநகரைச் சேர்ந்த ஒரு நபர் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு அவரது கடையை மூடிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியில் உள்ள நாய் அவரைப் பார்த்து தொடர்ச்சியாக குரைத்துள்ளது. அதனால் அவரால் அந்த தெருவைக் கடக்க முடியாமல் சத்தம் போட்டுள்ளார்.

அந்த நாயின் உரிமையாளரான 65 வயது பெண் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அதனையடுத்து அந்தப் பெண்ணுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் அந்த நபர் பெண்ணின் வயிற்றில் உதைத்துள்ளார். அதில் காயமடைந்த அப்பெண் ரோட்டில் மயங்கி விழுந்துள்ளார். 

அங்கிருந்தவர்கள் அப்பெண்ணை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனயில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அப்பெண் உயிரிழந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.” என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com