மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ராஜஸ்தானில் ஆட்சி நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது: அசோக் கெலாட்

ராஜஸ்தானில் அனைத்து துறைகளும் குழப்பத்தில் உள்ளதாகவும், ஆட்சி நிர்வாகமே ஸ்தம்பித்துள்ளதாகவும் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.

News image

அசோக் கெலாட் (கோப்புப்படம்)

Updated On :25 டிசம்பர் 2023, 11:47 am

ராஜஸ்தானில் ஆட்சி நிர்வாகமே ஸ்தம்பித்துள்ளதாக முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் விமர்சனம் செய்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்சரவை நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும், அதனால் அனைத்து துறைகளும் குழப்பத்தில் உள்ளதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் திங்கள்கிழமை விமர்சித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில் கூறியுள்ளதாவது, “டிசம்பர் 3-ஆம் தேதி ராஜஸ்தான் மக்கள் பாஜகவிடம் ஆட்சியதிகாரத்தை வழங்கினர். ஆனால் 22 நாட்களுக்குப் பிறகும் அவர்களால் அமைச்சரவையை அமைக்க முடியவில்லை.

இதனால் ஆட்சியே ஸ்தம்பித்துள்ளது. ராஜஸ்தான் மக்களிடம் தற்போது ஏமாற்றம் பரவத் தொடங்கியுள்ளது. மாநிலத்தின் அனைத்து துறைகளும் குழப்ப நிலையில் உள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “சிரஞ்சீவி திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்று ஊடக செய்திகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், எங்கள் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்த நிலைமையை தற்போதைய பாஜக அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும், புதிய முறை அமல்படுத்தப்படும் வரை முந்தைய முறை தொடர வேண்டும்.” என்று கூறினார்.

முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் சிரஞ்சீவி உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் மக்களுக்கு 25 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.