தெருநாய் கடித்ததால் படுகாயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நான்கு மாத குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே சைக்பேட் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குழந்தையின் பெற்றோர் கூலி வேலை செய்துவந்துள்ளனர். கடந்த டிச.8-ஆம் தேதி தேதி அவர்களது குடிசையினுள் தொட்டிலில் குழந்தையை தூங்கவைத்து விட்டு கூலி வேலைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது குடிசையின் அருகே மூன்று தெருநாய்கள் வந்துள்ளன. அதில் ஒரு நாய் குடிசையின் உள்ளே சென்று குழந்தையின் முகம் மற்றும் நெற்றியில் கடித்துள்ளது. அதையடுத்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்தவர்கள் குழந்தையை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
நாய் கடித்ததால் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நான்கு மாத குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த 20 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன. ஆனால் அவை அனைத்திற்கும் ஏற்கனவே கருத்தடை செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அந்த நாய்கள் அனைத்தும் மீண்டும் விடுவிக்கப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி 19-ம் தேதி அம்பர்பேட் பகுதியிலும் நான்கு வயது குழந்தையை தெருநாய்கள் கடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


