ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கேரளத்தில் பாஜகவுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது: பிருந்தா காரத் விமர்சனம்!

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக பாஜகவுடன் காங்கிரஸ் கட்சி கைகோர்த்துள்ளது என்று பிருந்தா காரத் குற்றம்சாட்டியுள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :25 டிசம்பர் 2023, 10:25 am

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக பாஜகவுடன் காங்கிரஸ் கட்சி கைகோர்த்துள்ளது என்று பிருந்தா காரத் விமர்சனம் செய்துள்ளார்.

கேரளத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் காவலர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் தாக்கப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் குற்றம் சாட்டியிருந்தார்.

அவரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து திங்கள்கிழமை பேசிய சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், “ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக பேசும் அதே வார்த்தைகளையே காங்கிரஸ் கட்சியும் பேசுகிறது. கேரளத்தில் காங்கிரஸ் கட்சியானது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவுடன் கைகோர்த்துள்ளது.

தேசிய அளவில் மோடிக்கு எதிராகப் போரிடுவதைப் பற்றி காங்கிரஸ் பேசுகிறது. ஆனால் கேரளத்தில் அப்படி இல்லை. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். காலையில் என்ன சொல்கிறதோ, அதையே மாலையில் காங்கிரஸ் கட்சியும் சொல்கிறது.

இதுதான் கேரளத்தில் நடக்கக்கூடிய அரசியல். மோடிக்கு எதிராகப் போராடுவதாக சொல்லிக்கொள்ளும் தேசியக் கட்சி இவ்வாறு நடந்துகொள்வதற்கு தேசிய கட்சி இதற்கு வெட்கப்பட வேண்டும். 

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் பேசியதாவது, “கேரளத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் காவலர்கள் மற்றும் சிபிஐஎம் கட்சியினரால் தாக்கப்படுகின்றனர். தேசிய அளவில் மோடியின் சர்வாதிகார அரசுக்கு எதிராகப் போராடி வருகிறோம். கெடுவாய்ப்பாக கேரளத்தில் பினராயி விஜயனின் அரசும் அதைப்போலவே செயல்பட்டு வருகிறது.” என்று குற்றம் சாட்டியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.