சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

குடியரசு தின அணிவகுப்பிற்கான தேர்வில் பஞ்சாபை நிராகரித்துள்ளது மத்திய அரசு: பகவந்த் மான்

குடியரசு தின அணிவகுப்பிற்கான தேர்வில் பஞ்சாபின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக கூறி பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

பகவந்த் மான் (கோப்புப்படம்)

Updated On :

குடியரசு தின அணிவகுப்பிற்கான தேர்வில் பஞ்சாபின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக கூறி பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு பஞ்சாப் மக்களுக்கு எதிராக எவ்வளவு வன்மத்தைக் கொண்டிருக்கிறது என்பதை இது காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் சிங் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “பஞ்சாபியர்களின் தியாகத்திற்கான மதிப்பை இன்று மத்திய பாஜக அரசாங்கம் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளது.

இந்த முறையும் ஜனவரி 26 குடியரசு தின அணிவகுப்பில் பஞ்சாபின் அட்டவணை சேர்க்கப்படவில்லை. நாங்கள் மூன்று பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பினோம். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தியாகிகளின் வரலாறு, மாய் பாகோஜியின் வரலாறு, விலைமதிப்பற்ற பஞ்சாபின் பாரம்பரியம் ஆகியவற்றை அனுப்பினோம். 

இவற்றை நிராகரித்துள்ளதன் மூலம் பஞ்சாப் மக்களுக்கு எதிராக மத்திய பாஜக அரசாங்கம் எவ்வளவு வன்மத்தைக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

குடியரசு தின அணிவகுப்பில் பஞ்சாப், தில்லி மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்த மூன்றுமே எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கக்கூடிய மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.