இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஒரு மாஸ்க் 485 ரூபாயா? ரூ.40,000 கோடி ஊழல் செய்ததாக எடியூரப்பா மீது குற்றச்சாட்டு

கரோனா பேரிடரின் போது கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா, ரூ.40,000 கோடி வரை ஊழல் செய்ததாக அக்கட்சியின் எம்எல்ஏ குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

News image
எடியூரப்பா (கோப்பு)
Updated On :27 டிசம்பர் 2023, 7:32 am

DIN

கரோனா பேரிடரின் போது கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா, ரூ.40,000 கோடி வரை ஊழல் செய்ததாக அக்கட்சியின் எம்எல்ஏ குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

மேலும், ஒரு முகக் கவசத்தை ரூ. 485-க்கு கொள்முதல் செய்ததாகவும், மருத்துவமனையில் ஒரு படுக்கைக்கு ரூ. 20,000 வாடகை அளித்ததாகவும் பாஜக எம்எல்ஏ பி.பி.யத்னால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து யத்னால் பேசியதாவது:

“கரோனா காலத்தில் பாஜக அரசு மிகப்பெரிய சூழல் செய்தது. ரூ. 45-க்கு விற்பனை செய்யப்பட்ட முகக்கவசத்தை ரூ.485-க்கு கொள்முதல் செய்தனர். சுமார் 10,000 படுக்கைகளை கரோனா மருத்துவமனைகளுக்கு வாடகைக்கு எடுத்தனர். ஒரு படுக்கையின் வாடகை ரூ. 20,000 ஆகும். இந்த தொகைக்கு இரண்டு படுக்கைகளை வாங்கியிருக்கலாம்.

ஒரு நோயாளியின் மருத்துவச் செலவாக ரூ. 10 லட்சம் வரை கட்டணம் செலுத்தப்பட்டது. இதன்மூலம் கரோனா காலத்தில் மட்டும் எடியூரப்பா தலைமையிலான அரசு ரூ.40,000 கோடி ஊழல் செய்துள்ளனர்.” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

“பாஜக எம்எல்ஏ யத்னாலின் குற்றச்சாட்டே பாஜக அரசுக்கு எதிரான ஆதாரமாகும். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் ரூ.4,000 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், அதைவிட 10 மடங்கு ஊழல் நடந்துள்ளது.

யத்னால் போகிற போக்கில் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது. ஊழலை ஒழிப்பதில் உறுதியாக இருந்தால், அவர் தனது குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். கரோனா ஊழல் குறித்த ஆதாரத்தை ஓய்வு பெற்ற நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையிலான விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் பதவியை யத்னா எதிர்பார்த்ததாக கூறப்படும் நிலையில், எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவை மாநில தலைவராக பாஜக தலைமை நியமித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.