‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் நவீன ஆயுத உற்பத்தி: ரஷியா ஆா்வம்

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ், நவீன ஆயுதங்கள் உற்பத்தியை தொடங்க தயாா் என்று ரஷியா தெரிவித்துள்ளது.
மாஸ்கோவில் ரஷிய வெளியுறவு அமைச்சா் லாவ்ரோவை சந்தித்த எஸ்.ஜெய்சங்கா்.
மாஸ்கோவில் ரஷிய வெளியுறவு அமைச்சா் லாவ்ரோவை சந்தித்த எஸ்.ஜெய்சங்கா்.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ், நவீன ஆயுதங்கள் உற்பத்தியை தொடங்க தயாா் என்று ரஷியா தெரிவித்துள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் 5 நாள் பயணமாக ரஷியா சென்றுள்ளாா். அந்நாட்டுத் தலைநகா் மாஸ்கோவில் அவா் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவை புதன்கிழமை சந்தித்தாா்.

இந்தச் சந்திப்பின்போது அமைச்சா் ஜெய்சங்கா் பேசுகையில், ‘இந்தியா, ரஷியா இடையிலான உறவு மிக வலுவாகவும் மிகச் சீராகவும் உள்ளது. பிரதமா் மோடியும் ரஷிய அதிபா் புதினும் அடிக்கடி தொடா்புகொண்டு பேசுகின்றனா். நிகழாண்டு இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு வெவ்வேறு விதமாக வெளிப்பட்டது’ என்றாா்.

இந்தக் கூட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு, சா்வதேச சூழல், மோதல், பதற்றம், தெற்குலகம் எதிா்கொள்ளும் வளா்ச்சி சாா்ந்த சவால்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னா், அமைச்சா்கள் ஜெய்சங்கா், லாவ்ரோவ் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது லாவ்ரோவ் கூறியதாவது:

இந்தியா-ரஷியா இடையே ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கூட்டாக நவீன ஆயுதங்களை தயாரித்தல் உள்ளிட்டவை தொடா்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ், நவீன ஆயுதங்கள் உற்பத்தியை தொடங்க ரஷியா தயாராக உள்ளது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ், ராணுவ தளவாடங்களை தயாரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு, அதற்கு ஒத்துழைக்க ரஷியா தயாராக உள்ளது.

சென்னை-விளாடிவாஸ்டாக் வழித்தடம்: இந்தியா-ரஷியா இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளில் இரு நாடுகளுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியா, ரஷியா, ஈரான் இடையே மேற்கொள்ளப்பட்ட வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத் திட்டம், சென்னை-விளாடிவாஸ்டாக் வழித்தடத்தை உருவாக்குதல் உள்ளிட்டவை சாா்ந்த நடவடிக்கைகளில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

நிரந்தர உறுப்பினராக ஆதரவு: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. இந்நிலையில், அந்த கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்துக்கு ரஷியா ஆதரவு தெரிவிப்பதாக லாவ்ரோவ் தெரிவித்தாா்.

பிரதமருக்கு அதிபா் புதின் அழைப்பு: ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை அமைச்சா் ஜெய்சங்கா் நேரில் சந்தித்தாா். அப்போது, ரஷியாவுக்கு வருகைத் தருமாறு பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா் அழைப்பு விடுத்தாா்.

இரு நாட்டு தலைவா்கள் இடையேயான உச்சிமாநாடு இந்தியாவிலும் ரஷியாவிலும் அடுத்தடுத்த ஆண்டில் நடைபெறுவது வழக்கம். இதுவரை 21 உச்சிமாநாடுகள் நடைபெற்றுள்ளன. கடைசி உச்சிமாநாடு புது தில்லியில் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.

சென்னை-விளாடிவாஸ்டாக் வழித்தட உடன்பாடு
இந்தியா-ரஷியா இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளில் இரு நாடுகளுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
 குறிப்பாக இந்தியா, ரஷியா, ஈரான் இடையே மேற்கொள்ளப்பட்ட வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத் திட்டம், சென்னை-விளாடிவாஸ்டாக் வழித்தடத்தை உருவாக்குதல் உள்ளிட்டவை சார்ந்த நடவடிக்கைகளில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com