6 வந்தே பாரத் ரயில் சேவைகள்: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

நாடு முழுவதும் 6 வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகளை பிரதமர் மோடி நாளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

நாடு முழுவதும் 6 வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகளை பிரதமர் மோடி நாளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி (நாளை)டிசம்பர் 30 உத்தரப் பிரதேசத்தின் அயோத்திக்கு பயணம் மேற்கொள்கிறார். அப்போது சுமார் ரூ. 11,100 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார். அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், நாட்டின் முதல் அம்ருத் பாரத் என்ற அதி விரைவு  பயணிகள் ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். 

இது, ரயில் பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்குகிறது. இதோடு ஆறு புதிய வந்தே பாரத் ரயில்களையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். அதில் கோவை - பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை ஒன்றும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் தினமும் இருமுறை இயக்கப்பட உள்ளது.

காலையில் கோவையில் காலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் சேலத்திற்கு 7.20, தருமபுரிக்கு 8.32, ஒசூருக்கு 10.05, பெங்களூரை பகல் 11.30 மணிக்கு சென்றடைகிறது. மறுமாா்க்கத்தில் நண்பகல் 1.40 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் ஒசூருக்கு 2.50, தருமபுரிக்கு 4.16, சேலத்திற்கு 5.53, கோவையை இரவு 8 மணிக்கு சென்றடைகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com