கரோனா நிலவரம்: சிகிச்சையில் 4,091, பாதிப்பு 797, பலி 5!

இந்தியாவில் சப்தமில்லாமல் மீண்டும் கரோனா அதிகரித்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 797 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 
கரோனா நிலவரம்: சிகிச்சையில் 4,091, பாதிப்பு 797, பலி  5!


இந்தியாவில் சப்தமில்லாமல் மீண்டும் கரோனா அதிகரித்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 797 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 

மத்திய சுகாதார அமைச்சகம் தினசரி கரோனா தகவலை வெளியிட்டு வருகின்றது. அதன்படி, மே 19,2023 முதல் கரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. 

ஒரேநாளில் புதிதாக 797 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், 4,091 பேர் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 

இந்தியா முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.50 கோடியாக உள்ளது. கேரளத்தில் 2, மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் தலா ஒருவரும் என மொத்தம் 5 பேர் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 

நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,கோடியாக அதிகரித்துள்ளது, மேலும் தேசிய மீட்பு விகிதம் 98.81 சதவீதமாக உள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.

நாட்டில் இதுவரை 220.67 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதளம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com