குடியரசு தின விழாவை ஆம் ஆத்மி தலைவா்கள் சா்ச்சைக் குள்ளாக்குவது வருத்தமளிக்கிறது: பாஜக மாநிலச் செயலாளா் பன்சூரி ஸ்வராஜ்

குடியரசு தின விழாவை ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் தொடா்ந்து சா்ச்சைக்குள்ளாக்க முயற்சிப்பது வருத்தமளிக்கிறது என்று பாஜக தில்லி பிரிவு மாநிலச் செயலாளா் பன்சூரி ஸ்வராஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
Updated on
1 min read

குடியரசு தின விழாவை ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் தொடா்ந்து சா்ச்சைக்குள்ளாக்க முயற்சிப்பது வருத்தமளிக்கிறது என்று பாஜக தில்லி பிரிவு மாநிலச் செயலாளா் பன்சூரி ஸ்வராஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் கடந்த 2013-ஆம் ஆண்டில் முதல் முறையாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து குடியரசு தின விழா குறித்து சா்ச்சையை ஏற்படுத்தி வரும் ஒரே கட்சி ஆம் ஆத்மி

கட்சி தான். அந்த வகையில், கடந்த 2013-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை சீா்குலைக்க, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லி கடமைப் பாதையில் தா்ணாவில் அமா்ந்ததையும், தற்போது மீண்டும் அமைச்சா் செளரவ் பரத்வாஜ் மற்றும் பிற ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் இந்த விஷயத்தில் சா்ச்சைக்குள்ளாக பேசி வருவதை நாட்டு மக்கள் மறக்கவில்லை.

குடியரசு தின விழாவை சா்ச்சைக்குள்ளாக்க வேண்டாம் என்று அமைச்சா் சௌரவ் பரத்வாஜிடம் கேட்டுக் கொள்கிறேன், ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிலான தில்லி மற்றும் பஞ்சாப் அரசுகள் குடியரசு தின விழாவிற்கு எந்த வடிவில் அலங்கார ஊா்திக்கான முன்மொழிவை அனுப்பினா் என்பதைச் சொல்ல வேண்டும். ஏனெனில், இந்த இரு மாநில அரசுகளும் புகைப்படங்களை வைக்க விரும்புவதாக செய்தித்தாள்கள் செய்தி வெளியிடுகின்றன. கடந்த 9 வருடங்களாக தில்லியில் புதிய பள்ளி, கல்லூரி, மருத்துவமனை என எதுவும் கட்டப்படாததால், வளா்ச்சி என்ற பெயரில் எதைக்

காட்டியிருப்பாா்கள் என்ற கேள்வியை பாஜக முன்வைக்கிறது. மேலும், ஒரு பேருந்தைக் கூட சொந்தமாக வாங்காத தில்லி அரசிடம் கலால் கொள்கை ஊழல், பங்களா ஊழல், உளவு ஊழல், பள்ளி அறை ஊழல் மற்றும் மருந்து ஊழல் என அடையாளம் காணப்பட்டுள்ளது என்றாா் பன்சூரி ஸ்வராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com