இன்ஸ்டாகிராம் தோழியுடன் 'விடியோ கால்'! கொலை செய்யப்பட்ட நபர்!

தில்லியில் பெண் ஒருவரோடு 'விடியோ காலில்' (Video Call) பேசியதால் உருவான சண்டையில் 20 வயது நபர் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
கோப்புப்படம்.
கோப்புப்படம்.

தில்லியில் பெண் ஒருவரோடு 'விடியோ காலில்' பேசியதால் உருவான சண்டையில் மஹிர் அலியாஸ் இம்ரான் எனும் நபர் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

20 வயதான இம்ரான் கத்தியால் பலமுறை குத்தப்பட்டு சாலையோரத்தில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். விசாரணையில் 18 வயதான அர்மான் கான், 21 வயதான ஃபைசல் கான், 19 வயதான சமீர் அலியாஸ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து காவல்துறையினர் கூறுவதாவது, 'இம்ரான் மற்றும் அர்மான் ஆகியோருக்கு ஒரே பெண்ணோடு இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் அந்தப் பெண்ணை சந்திக்க சென்றபோது அவர் அர்மானுடன் விடியோ காலில் பேசிக்கொண்டிருந்ததை இம்ரான் பார்த்துள்ளார். 

அதன்பின் இம்ரான், அர்மானை துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண்ணின் செல்போனை வாங்கிக்கொண்டு இனி இம்ரானுடன் பேசக்கூடாது என அர்மான் கூறியுள்ளார். 

பின்னர், அவரது செல்போனைத் திருப்பித் தருவதாகக் கூறி இம்ரானை வரழைத்து, மூவரும் அவனைக் கத்தியால் குத்திக்கொன்றதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com