மகாராஷ்டிரம், மேற்கு வங்கத்தில் புதிய தலைமைச் செயலாளர்கள் நியமனம்!

மகாராஷ்டிரம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு புதிய தலைமைச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நிதின் கரீர், பி.பி.கோபாலிகா
நிதின் கரீர், பி.பி.கோபாலிகா

மகாராஷ்டிரம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு புதிய தலைமைச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக நிதின் கரீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

1988-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான நிதின் கரீர் தற்போது கூடுதல் தலைமைச் செயலாளராக (நிதித்துறை) பணியாற்றி வருகிறார். இவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தலைமைச் செயலாளராக பொறுப்பேற்கிறார். 

அதேபோல, மேற்கு வங்க மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக பி.பி.கோபாலிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

1989-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான பி.பி.கோபாலிகா போக்குவரத்து, கால்நடை மற்றும் பணியாளர் நலத்துறை செயலாளராக பணியாற்றி வந்தார். 

தற்போதுள்ள தலைமைச் செயலாளர் ஹெச்.கே.திவிவேதியை தொடர்ந்து புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்க உள்ள பி.பி.கோபாலிகா அடுத்த ஐந்து மாதங்கள் மட்டுமே இப்பொறுப்பில் இருப்பார். 2024 மே 31-ஆம் தேதி இவர் பணி ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com