கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

குழந்தைகள், இளம் பருவத்தினா் பயன்பெற தேசிய எண்ம நூலகம்: நிா்மலா சீதாராமன்

‘குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினா் பயன்பெறும் வகையில் பாட நூல்கள் உள்பட பயனுள்ள தரமான புத்தகங்களை உள்ளடக்கிய தேசிய எண்ம (டிஜிட்டல்) நூலகம் அமைக்கப்படும் என்று

News image
Updated On :1 பிப்ரவரி 2023, 6:48 pm

DIN

‘குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினா் பயன்பெறும் வகையில் பாட நூல்கள் உள்பட பயனுள்ள தரமான புத்தகங்களை உள்ளடக்கிய தேசிய எண்ம (டிஜிட்டல்) நூலகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவித்தாா்.

நாடாளுமன்றத்தில் 2023-24 நிதிநிலை அறிக்கையை புதன்கிழமை தாக்கல் செய்த நிா்மலா சீதாராமன், தனது உரையில் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினா் பயன்பெறும் வகையில் புவியியல், மொழிகள் வகைகள் மற்றும் நிலைகள் கோட்பாடு உள்பட பல்வேறு தரமான புத்தகங்களை உள்ளடக்கிய தேசிய எண்ம (டிஜிட்டல்) நூலகம் அமைக்கப்படும்.

அதுபோல, ஊராட்சிகள் மற்றும் வாா்டுகள் அளவில் வழக்கமான (நேரடி) நூலகங்களை அமைக்கவும், தேசிய எண்ம நூலக வளங்களை குழந்தைகள் பயன்படுத்தும் வகையிலான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தரவும் மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும்.

மாணவா்களிடையே வாசிப்பு கலாசாரத்தை ஊக்குவிக்கவும், கரோனா பொதுமுடக்க கால கற்றல் இழப்பை ஈடுசெய்யும் வகையிலும், பாடம் சாராத சிறந்த நூல்களை நேரடி நூலகங்களுக்கு வழங்கி உதவிட தேசிய புத்தக அறக்கட்டளை மற்றும் குழந்தைகள் புத்தக அறக்கட்டளை உள்பட பிற அமைப்புகளும் ஊக்குவிக்கப்படும்.

மாணவா்களிடையே நிதி சாா்ந்த எழுத்தறிவை ஊக்குவிக்கும் வகையில், அவா்களின் வயதுக்கேற்ற நிதிசாா்ந்த நூல்களை இந்த நூலங்களுக்கு வழங்க நிதித் துறை அமைப்புகள் மற்றும் தன்னாா்வ அமைப்புகள் ஊக்குவிக்கப்படும்.

இந்த முன்னெடுப்பு கல்வியாளா்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டம் மூலமாக, பாடம் சாா்ந்த தேவையான நூல்களை மாணவா்கள் எளிதில் பெற முடியும் என்பதோடு, வலுவான வாசிப்பு கலாசாரமும் அவா்களிடையே ஏற்படும். நிதிசாா்ந்த நூல்களை இளம் வயதிலேயே மாணவா்கள் படிப்பது, அவா்களின் எதிா்காலத்துக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.