புதுதில்லி: சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் கர்நாடக மாநிலத்தின் பாஜக மேலிட பொறுப்பாளராக கட்சியின் மூத்த அமைப்பாளரும், மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பேரவைத் தோ்தலை முழுவீச்சில் எதிா்கொள்ள ஆளும் பாஜக முடிவு செய்துள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு மக்கள் சந்தித்து வரும் நிலையில் கர்நாடகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் பாஜக மேலிட பொறுப்பாளராக கட்சியின் மூத்த அமைப்பாளரும், மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை நியமனம் செய்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
கட்சியின் மூத்த அமைப்பாளரான பிரதான், கடந்த காலங்களில் பல தேர்தல்களைக் கையாளும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
பிரதான், ஒரு திறமையான அரசியல்வாதி, அவர் முக்கியமான தென் மாநிலங்களில் பாஜக அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை அதிகரிக்கப்பதற்காக உள்ளூர்நிலைகளில் உள்ள உள்கட்சி பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வேளையில் ஈடுபட்டு, மாநில அமைப்பை வலுப்படுத்தும் செயலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி என்ஐடி-ல் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

மருத்துவமனையில் சோனியா... ராகுல் காந்தியின் கேரள பிரசாரம் ஒத்திவைப்பு!
இணையத்தில் வைரலாகும் வாரணாசி செட்!

காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு!
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

