சிறையில் சாப்பிட ஆசையா? உணவகமே வந்துவிட்டது
பாட்னா: பொதுவாக யாருக்கும் சிறைக்குச் செல்ல பிடிக்கவே பிடிக்காத. ஆனால், அந்த சிறைச்சாலையே மாதிரியாக வைத்து பலரையும் ஈர்த்து வருகிறது ஒரு உணவகம்.
பிகார் மாநிலம் பாட்னாவில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு உணவகம் சிறைச்சாலை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோல ஒன்றல்ல.. இரண்டல்ல.. வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பு காரணமாக காளான்கள் போல பிகாரில் இந்த சிறை உணவகம் முளைத்துவிட்டன.
இதையும் படிக்க.. பழைய வரி - புதிய வரி: எந்த முறை உங்களுக்கு சிறந்தது?
ஒரு மிகப்பெரிய உணவகம், சிறைக்கூடம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் 10 குளிர்சாதன வசதி கொண்ட சிறை அறைகள். அந்த அறைக்குள் உணவருந்தும் மேஜை, நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல, உணவருந்த வருபவர்களுக்கு கையில் விலங்கும் போடப்படுகிறது.
இதையும் படிக்க.. சமூக வலைத்தளங்களில் பாதுகாப்பாக இருப்பது எப்படி? வாட்ஸ்ஆப் விளக்கம்
இதுபோன்ற உணவங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறதாம். ஜெயிலுக்குப் போக பிடிக்காதுதான். ஆனால், இந்த உணவகத்துக்குச் சென்று வித்தியாசமான சூழலில் உணவருந்திவிட்டு வருவது அதுவும் குடும்பத்தோடு என்றால் மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
சில உணவகங்களில், உணவுப் பரிமாறுபவர்களுக்கு சிறைக் கைதிகளுக்கான ஆடையை வழங்கியிருக்கிறது. இங்கு எந்த குற்றமும் செய்யாமல் உள்ளே வரலாம். விரும்பிய உணவை சுவைக்கலாம். பணத்தைக் கட்டிவிட்டுச் செல்லலாம் என்கிறார்கள் சிரித்தபடி.
இதையும் படிக்க.. கேரளத்தில் முதல் முறை.. தாயாகியிருக்கும் திருநம்பி
பலரும் புகைப்படம் எடுப்பதற்காகவே வருகிறார்கள். வயிறு நிரம்புகிறதோ இல்லை, செல்லிடப்பேசியில் கேலரி நிரம்பி விடுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.