இருட்டில் ஸ்மார்ட்போன் கூடாதா? கண்பார்வையை இழந்த இளம் பெண்!

இன்றைய உலகில் அனைவரும் ஸ்மார்ட் ஃபோன்களை உபயோகிக்கிறோம். ஆனால் நம்மில் பலர் இந்த ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அடிமையாகி விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

நவீனமயமான இன்றைய உலகில் ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடு அதிகரித்துள்ளது. தற்போது, நம்மில் பலர் இந்த ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அடிமையாகி விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். தர்போது ஸ்மார்ட் ஃபோன் இல்லாமல் பலரால் இருக்க முடியாது என்ற நிலைக்கு சென்று விட்டோம். இந்த நிலையால் அவர்களின் ஆரோக்கியம் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் சுதீர் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஓர் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் வழக்கமான நடத்தையின் விளைவாக இளம் பெண்ணின் பார்வை எவ்வாறு கடுமையாக பாதிக்கப்பட்டது என விளக்கியுள்ளார்.

30 வயதான மஞ்சு, இரவில் தினமும் தனது தொலைபேசியில் அதிக நேரம் செலவளித்துள்ளார். அப்பெண்ணுக்கு பார்வைக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவரின் கூற்றுப்படி ஒளியின் தீவிர ஃப்ளாஷ்கள், இருண்ட ஜிக்ஜாக் வடிவங்கள் போன்ற அறிகுறிகள் இருந்துள்ளது பரிசோதனையில் கண்டரியப்பட்டது.

இதனையடுத்து  மருத்துவர்கள், அந்த பெண் ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து மருத்துவர் பரிந்துரைத்ததன் அடிப்படையில் அந்த பெண்ணுக்கு  மருந்துகள் எடுத்துரைத்து, அவரின் தொலைபேசியின் திரை நேரத்தைக் குறைக்க செய்ததால் அவளது பார்வையை மீட்டெடுக்க முடிந்தது. இதனால் கடந்த 18 மாதங்களாக இருந்தப் பார்வைக் குறைபாட்டிலிருந்து அந்தப் பெண் மீண்டார்.

மஞ்சுவுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பலர் ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோம் அல்லது கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் அல்லது டிஜிட்டல் விஷன் சிண்ட்ரோம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கவலையளிக்கிறது.

இதில் விஷயங்களை தீவிரமாக்குவது என்னவென்றால், இந்த நோய் முழுமையான பார்வை இழப்புக்கு கூட வழிவகுக்கும் என்பதே. மருந்து மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொண்டு ஒருவரை இன்னும் குணப்படுத்த முடியும் என்றாலும், ஸ்மார்ட்போனை பொறுப்புடன் பயன்படுத்துவது அவசியம் என்றார்.

மொபைல் அனலிட்டிக்ஸ் நிறுவனமான டேட்டா.ஏஐ-யின் கருத்துப்படி, இந்தியாவில் சராசரியாக ஸ்மார்ட்ஃபோன் நுகர்வு 2020ல் சுமார் 4.5 மணி நேரமாகவும், 2019ல் அது 3.7 மணி நேரமாகவும் இருந்து 2021ல் ஒரு நாளைக்கு அது 4.7 மணி நேரமாக அதிகரித்துள்ளது என்றது.

தொடர்ந்து இருண்ட அறைகளில் குறைந்த வெளிச்சத்தில் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இந்த விஷயங்கள் மனதைப் பாதிப்பது மட்டுமல்லாமல், பார்வை பாதிப்புக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com