உத்தரகண்டில் ஹெலிகாப்டர் இறங்குதளத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் தாமி!

உத்தரகண்டின், கதிமாவில் தற்காலிக ஹெலிகாப்டர் இறங்குதளத்தை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி திறந்துவைத்தார். 
உத்தரகண்டில் ஹெலிகாப்டர் இறங்குதளத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் தாமி!

உத்தரகண்டின், கதிமாவில் தற்காலிக ஹெலிகாப்டர் இறங்குதளத்தை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி திறந்துவைத்தார். 

காதிமாவில் உள்ள லோஹியா என்ற இடத்தில் தற்காலிக ஹெலிகாப்டர் இறங்குதளத்தை அவர் திறந்துவைத்தார். 

முன்னதாக பிப்ரவரி 8-ம் தேதி உத்தரகண்ட் முதல்வர் தாமி ஹல்த்வானி கத்கோடம் மாநகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையைத் திறந்துவைத்தார். 

சுற்றுலா மற்றும் வனவிலங்குகளை அடையாளம் காணும் வகையில் சர்வதேச உயிரியல் பூங்கா அமைப்பதற்குத் தேவையான நிதிக்கு ஒப்புதளிப்பதாகவும் அவர் அறிவித்தார். 

பிரதமர் நரேந்திர மோடியால் உருவான நமாமி கங்கை பூமியில் நனவாகி வருவதாக முதல்வர் தனது உரையில் தெரிவித்தார்.

கங்கை நதியுடன், மாநிலத்தின் அனைத்து ஆறுகளிலும் உள்ள மாசுபாட்டை நீக்கி, நதிகளுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com