தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மருத்துவமனையில் உம்மன் சாண்டியை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் வீணா ஜார்ஜ் 

முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியை மருத்துவமனையில் சந்தித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நலம் விசாரித்தார். 

News image
Updated On :10 பிப்ரவரி 2023, 2:31 pm

DIN

முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியை மருத்துவமனையில் சந்தித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நலம் விசாரித்தார். 

கேரள மாநிலம், நெய்யாட்டின்கராவில் உள்ள நிம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி பிப்ரவரி 7 திங்கள்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். அவரை சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்து நலம் விசாசித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், முதல்வர் பினராயி விஜயன் உத்தரவின்படி, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியை மருத்துவமனைக்குச் சென்று பார்த்தேன். ஏற்கெனவே முதல்வர், உம்மன் சாண்டியின் மகனை நேற்று அழைத்து அவரது மகள் மற்றும் மருத்துவர்களைச் சந்தித்தார்.

மருத்துவமனையில் டாக்டர் மஞ்சு தலைமையில் அமைக்கப்பட்ட மருத்துவக் குழு அவருக்கு சிகிச்சை அளிக்கும் என்றார். இதனிடையே உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் தனது முகநூல் பதிவில், தனக்கு நிமோனியா லேசாக ஆரம்பமாகி இருப்பதாகவும், அதிக காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். 

மேலும் முதல்வர் பினராயி விஜயன், நேரில் அழைத்து உம்மன் சாண்டியின் உடல்நிலை குறித்து விசாரித்ததற்கு அவர் நன்றி கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.