3 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்! எஸ்.எஸ்.எல்.வி. டி-2 திட்டம் வெற்றி: இஸ்ரோ

எஸ்.எஸ்.எல்.வி திட்டம் இந்தியாவில் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சோம்நாத்
சோம்நாத்


எஸ்.எஸ்.எல்.வி திட்டம் இந்தியாவில் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ராக்கெட்டுடன் அனுப்பப்பட்ட 3 செயற்கைக்கோள்களும் புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. 

எஸ்எஸ்எல்வி டி-1 ராக்கெட் மூலம் ஏற்கெனவே, மைக்ரோ செயற்கைக்கோளை கடந்த ஆகஸ்ட் மாதம் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியது. ஆனால், தொழில்நுட்ப பிரச்னை காரணமாக திட்டம் வெற்றியடையவில்லை. 

அதனைத் தொடர்ந்து தற்போது, மேம்படுத்தப்பட்ட எஸ்எஸ்எல்வி டி-2 ரக ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த எஸ்எஸ்எல்வி டி-2 ராக்கெட்டில் முதன்மைச் செயற்கைக்கோளான இஒஎஸ்-7, இந்தியாவின் ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் மூலம் 750 பள்ளி மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட ஆசாதிசாட்-2, அமெரிக்காவின் ஜானஸ் ஆகிய 3 செயற்கைக்கோள்களும் செலுத்தப்பட்டன.

இந்த மூன்று செயற்கைக்கோள்களும் தற்போது வெற்றிகரமான அதன் சுற்றுவட்டப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சென்ற ஆண்டு எஸ்எஸ்எல்வி டி-1 திட்டம் தோல்வியில் முடிந்தது. அந்த தோல்வியில் நிறைய கற்றுக்கொண்டோம். தவறுகளைக் கண்டறிந்து அதில் அதிக கவனம் செலுத்தினோம். தற்போது எஸ்எஸ்எல்வி டி-2 திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இது எங்கள் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பரிசு. செயற்கைக்கோள்களுக்காக பணியாற்றிய மூன்று குழுக்களுக்கும் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com