
மும்பை புறநகர் போரிவலியில் போதைப்பொருள் வைத்திருந்த நைஜீரிய நாட்டவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.16 லட்சம் மதிப்புள்ள கோகோயின் மற்றும் மெபெட்ரோனும் பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பை குற்றப்பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு போரிவலி மேற்கு பகுதியில் போதைப்பொருள் கடத்தும் நபர் குறித்து உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்றிரவு சந்தேக நபர் ஒருவர் பள்ளிக்கு அருகே காணப்பட்டதையடுத்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு காவலில் வைக்கப்பட்டார்.
அவரிடமிருந்து 55 கிராம் மெபெட்ரோன் போதைப்பொருள் மற்றும் 12 கிராம் கோகோயின் ஆகியவற்றை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மீட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.