சேலம் - திண்டுக்கல்; ஒசூர் - ஓமலூர் இருவழி ரயில் தடத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!பாரத ரத்னா பெற்ற 92 வயது விஞ்ஞானிக்கு எஸ்.ஐ.ஆர். நோட்டீஸ்! வினோதமான கேள்வி! முதல்வர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது! திருமாவளவன் கண்டனம்செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

பிபிசி கணினிகளில் வருமான வரித் துறையினர் தேடிய சொற்கள்!

பிபிசி அலுவலகக் கணினிகளில் வருமான வரித் துறையினர் முக்கியமான சில சொற்களை உள்ளீடு செய்து தேடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published On :

பிபிசி அலுவலகக் கணினிகளில் வருமான வரித் துறையினர் முக்கியமான சில சொற்களை உள்ளீடு செய்து தேடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லி, மும்பையிலுள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் தொடர்ந்து 2வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

20 மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த சோதனையில், பிபிசி அலுவலகக் கணினிகளிலும், முக்கிய பொறுப்புகளிலுள்ளவர்களின் கணினிகளிலும் சில முக்கிய சொற்களை உள்ளீடு செய்து அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். 

வரி (டேக்ஸ்), ரசீது (பில்ஸ்), கருப்புப் பணம் (பிளாக் மனி) போன்ற வார்த்தைகள் உள்ளீடு செய்து தேடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பிபிசியில் சில மூத்த அதிகாரிகளின் செல்போன்களும் பரிசோதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

பிபிசி அலுவலகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித் துறை சோதனைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

பிபிசியில் நடைபெற்று வரும் சோதனை ஆழ்ந்த வருத்தம் அளிப்பதாக செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் கூட்டமைப்பு  தெரிவித்துள்ளது. இது உலகின்  மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் மீதான நன்மதிப்பை குறைப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.