மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

டிமான்டி காலனி - 3 முதல் ஹாய் வரை... ஜீ5 ஓடிடியில் வெளியாகும் படங்கள், இணையத் தொடர்கள்!

ஜீ5 ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள், இணையத் தொடர்கள் குறித்து..

News image

ஹாய் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ்.

Updated On :26 ஜூலை 2026, 12:50 pm IST

பிரபல ஓடிடி தளமான ஜீ5 நிறுவனம், தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் வங்காளம் ஆகிய ஏழு மொழிகளில் வெளியாகவுள்ள படங்கள் மற்றும் இணையத் தொடர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

7 மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள், இணையத் தொடர்கள், நேரடி விளையாட்டு ஒளிபரப்புகள், செய்யறிவு தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட கதைகள், அனிமேஷன் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் என விரிவான பொழுதுபோக்கு உலகத்தை ஒரே தளத்தில் வழங்கும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

தமிழ்

தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கூஸ் முனிசாமி வீரப்பன், தடயம் ஆகிய இணையத் தொடர்களின் புதிய பகுதிகள் வெளியாகின்றன.

மேலும் அனந்தகாலம், தீக்குரல் (சுயாதீன ராப் நிகழ்ச்சி) ஆகியவை அறிமுகமாகின்றன.

திரைப்பட வரிசையில் டிமான்டி காலனி - 3, நயன்தாராவின் ஹாய் மற்றும் ராவடி ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.

தெலுங்கு

ஸ்ரீமதி, அப்ஜக்ஷன் மைலார்ட், ஜெயம்மு நிச்சயம்மு ரா (டாக் ஷோவின் புதிய சீசன்), வெங்கி அனில் 5, என்பிகே 111, விருஷகர்மா உள்ளிட்ட படங்கள் மற்றும் இணையத் தொடர்கள், நிகழ்ச்சிகள் வெளியாகின்றன.

மலையாளம்

தி குயின், மலபார் கப், கேரளா அண்டர்கிரவுண்ட் (ராப் நிகழ்ச்சி), பாலன் தி பாய் ஆகியவை இடம்பெறுகின்றன.

கன்னடம்

அய்யன மனே புதிய சீசன், பிட்காயின் ஸ்கேம், ஆபரேஷன் பங்காரா ஆகிய தொடர்களுடன் காரவளி திரைப்படமும் வெளியாகிறது.

ஹிந்தி

ஹிந்தி மொழியில் வருண் தவான், பூஜா ஹெக்டே நடிக்கும் ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை, மாதவன் தொகுத்து வழங்கும் ஜீனா இஸி கா நாம் ஹை 2.0, ரங் பாஸ் பாகம் - 4 போன்றவை இடம்பெற்றுள்ளன.

வங்காளத்தில் லால்பஜார் சீசன் 2, மராத்தியில் ஹே கே நவீன்? புதிய சீசன் உள்ளிட்ட பல திரைப்படங்கள், இணையத் தொடர்கள், நிகழ்ச்சிகள் வெளியாகவுள்ளன.

Summary

The popular OTT platform ZEE5 has released a list of movies and web series set to be released in seven languages: Tamil, Telugu, Marathi, Malayalam, Kannada, Hindi, and Bengali.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.