எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது மிகவும் முக்கியம். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் ஒன்றினைய வேண்டும். எதிர்க்கட்சிகளால் பொதுவாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் அவர்களால் பாஜவின் வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். அதன் பின் தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் ஆளும் பாஜவுக்கு மிகவும் சவாலனதாக இருக்கப் போகிறது. ஆளும் பாஜகவுக்கு எதிரான அதிருப்தி நாட்டில் காணப்படுகிறது. அதனால், கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவை இந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவால் பிரதிபலிக்க முடியாது என்றார்.