பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் இந்தியா வந்தன!

தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் (சீட்டா) விமானம் மூலமாக  இன்று இந்தியாவுக்கு வந்தன. 

News image
Updated On :18 பிப்ரவரி 2023, 5:16 am

DIN

தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் (சீட்டா) விமானம் மூலமாக  இன்று இந்தியாவுக்கு வந்தன. 

இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலியை மீண்டும் அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் லட்சியத் திட்டத்தின்படி, நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் (5 பெண் சிவிங்கிப் புலிகள், 3 ஆண் சிவிங்கிப் புலிகள்) ஏற்கெனவே இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன.

கடந்த ஆண்டு செப்டம்பா் 17-ஆம் தேதி, தனது பிறந்த தினத்தில் பிரதமா் மோடி இந்த 8 சிவிங்கிப் புலிகளையும் மத்திய பிரதேச மாநிலம், குனோ தேசியப் பூங்காவில் திறந்துவிட்டாா். இப்போது 8 சிவிங்கிப் புலிகளும் நல்ல உடல்நிலையுடன் காணப்படுகின்றன.

அடுத்தகட்டமாக, தென் ஆப்பிரிக்காவில் இருந்து 7 ஆண் சிவிங்கிப் புலிகளும் 5 பெண் சிவிங்கிப் புலிகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்திய விமானப் படையின் சி-17 விமானம் வியாழக்கிழமை அந்நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றது. 

அதன்படி அந்நாட்டின் கெளடெங் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து 12 சிவிங்கிப் புலிகளுடன் சி-17 விமானம் மத்திய பிரதேசத்தின் குவாலியா் விமானப் படை தளத்துக்கு சனிக்கிழமை காலை வந்தடைந்தது. 

அங்கிருந்து, விமானப் படையின் எம்ஐ-17 ஹெலிகாப்டா் மூலம் கொண்டு செல்லப்படும் சிவிங்கிப் புலிகள் குனோ தேசிய பூங்காவில் விடப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.